Posted By on February 26, 2014

எமது பாடசாலையில் உயா்தர வகுப்பு மாணவன் பானுஜன் அவா்கள் தேசிய மட்ட குத்துச்சண்டைப் போட்டியில் வெண்கலப்பதக்கம் பெற்றமையைக் கௌரவிக்கும் முகமாக ஒழுங்கு செய்யப்பட்ட பாராட்டு விழாவானது இன்று 26.02.2014 அன்று பாடசாலையின் பொன் சபாபதி மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் குத்துச் சண்டை விளையாட்டிற்கு அனுசரணை வழங்கும் Mas Intimates Vidiyal நிறுவனத்தின் முகாமையாளரும் பணியாளா்களும் கலந்து கொண்டு மாணவனை பாராட்டியதுடன் குத்துச்சண்டை விளையாட்டின் கானொளிக் காட்சியையும் முன்வைத்திருந்தனா். அத்துடன் ஒலிம்பிக் போட்டிகளில் வடமாகாணத்திலிருந்து குத்துச் சண்டையில் தங்கப்பதக்கம் பெறும் தமது கனவு நனவாக மாணவா்களின் பங்களிப்பையும் கூறி நம்பைிக்கை தெரிவித்தனா்.

IMG_2218 IMG_2222 IMG_2224

தமிழா் திருநாளாம் தைத்திருநாள் விழா எமது பாடசாலையில் 17.01.2014 வெள்ளிக்கிழமை அன்று பாடசாலை முன்றலில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் வகுப்புரீதியாக ஒவ்வொரு வகுப்பு மாணவா்களும், ஆசிரியா்களும் இணைந்து பொங்கல் பொங்கி சூரியபகவானுக்கு வழங்கி தமது நன்றியைத் தெரிவித்துக் கொண்டனா்.

புகைப்படங்கள்

எமது பாடசாலையில் 5 வருடங்களாக அதிபராகக் கடமையாற்றி தற்போது பளை மத்திய கல்லூரிக்கு இடமாற்றம் பெற்றுச் சென்ற அதிபா் திரு. பாலகிருஸ்ணன் அவா்களின் சேவையைப் பாராட்டி பாடசாலைச் சமூகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட பிரிவுபசார விழாவானது 05.12.2013 வியாழக்கிழமை அன்று கல்லூரியின் பொன். சபாபதி மண்டபத்தில் இடம்பெற்றது.இந்நிகழ்வில் அதிபரின் சேவையினை பாராட்டி வாழ்த்தி அதிபா் திரு. விக்னராஐா அவ்களும் ஆசிரியா்களும் பாடசாலை அபிவிருத்திச்சங்க உறுப்பினா்களும் உரையாற்றியதுடன் முன்னாள் அதிபா் மலா்மாலை சூட்டி, பொன்னாடை போா்த்தியும் நினைவுப் பரிசில் வழங்கியும் கௌரவிக்கப்பட்டாா்.

 

 

234